நடைபயிற்ச்சிக்கு சென்ற மூதாட்டி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தென்றல் நகரில் பாண்டியன் என்பவர் தனது மனைவி மயில்தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மயில்தாய் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 27ஆம் தேதி வழக்கம்போல மயில்தாய் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரவாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இருப்பினும் மயில்தாயை கண்டுபிடிக்க முடியாததல் பாண்டியன் இதுகுறித்து போடி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மயில்தாய் கழுத்தில் 17பவுன் நகைகளை அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. எனவே நகைக்காக யாரேனும் அவரை கடத்தியுள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.