Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இ- சேவை மையங்களில்…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இ சேவை மையங்களில் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் மட்டும் பரிசீலனைக்குப் பிறகு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று  முதல் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழையும் இ சேவை மையம் வாயிலாகப் பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வாங்க ஆர்டிஓ விசாரணையில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இருந்ததால் இ சேவை மையங்களில் இந்த சான்று தரப்படாமல் இருந்தது. தற்போது இதில் இருந்த சிக்கல்களை நீக்க இந்த சான்றிதழ்களையும் இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெறும் வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

Categories

Tech |