Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. மின்வயரில் விழுந்த மரம்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்….!!

கனமழையால் மின்சார வயரில் மரம் விழுந்ததால் மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது மாநகராட்சி பகுதியில் உள்ள மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையான மின்சார வயரில் கொக்கிரகுளம் பீடர் மின் கம்பியில் மேலப்பாளையம் ராஜா நகர் குடிநீர் தொட்டி அருகில் மாலை நேரத்தில் திடீரென ஒரு பெரிய மரம் விழுந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின் வாரிய பணியாளர்கள் பார்வையிட்டனர். அதன்பின் மின்வாரிய ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தி மின்இணைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின் தடையை உடனடியாக சரி செய்வதற்காக பொது மக்களுக்கு மாற்று ஏற்பாடு மூலம் உடனடியாக மின்சாரத்தை வழங்கினர்.

Categories

Tech |