மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பேரும் புகழும் அடைய கூடும். பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இ ன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களையும் படியுங்கள்.
மன கஷ்டம் பண கஷ்டம் அனைத்துமே இன்று சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் கொஞ்சம் கடுமையாகவே உழைக்க வேண்டியிருக்கும். ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் உங்கள் திறமையை காட்டுவது சிறப்பு.. எதிர் பார்த்த பணம் கிடைக்கும். உங்களுடைய வசீகரப் பேச்சால் இன்று அனைத்துமே பூர்த்தி ஆகும்.
இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் முன் கோபத்தால் உறவுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படக் கூடும். அதனால் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மையும் உண்டாகும். இன்று மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாராட்டுகளை பெறுவார்கள்.
உங்களுடைய தனித்திறமை மேம்படும். சக மாணவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கிற்கு இடம் கொடுக்க வேண்டாம். இன்று பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அதுபோலவே குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவே இன்று காணப்படுவார்கள். முக்கியமான பணியையும் இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதுமட்டுமில்லாமல் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பாசம் அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அதுபோலவே வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சிறிதாக வீண் அலைச்சல் இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு செல்வச் செழிப்பான நாளாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு ஆதரவு முக்கியஸ்தர்களின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். அதன் காரணமாக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும் மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் தைரியம் பிறக்கும். இன்று பெண்களுக்கு திருமண பேச்சுவார்த்தை கைகூடும் அரசால் அனுகூலம் உண்டாகும்.
உங்களை எதிர்த்தவர் இன்று அடங்கி செல்லக்கூடும். தந்தையுடன் விவாதம் எதுவும் வேண்டாம். பொறுமையாக இருங்கள். கவனமாக பேசுங்கள். தகப்பனார் வழியில் இருந்த பிரச்சனைகளும் தீரும். இன்று சகோதரர்களின் ஒற்றுமை உங்களுக்கு கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் காணப்படும். இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பபை கொடுக்கும்.
ஆதாயம் உங்கள் இல்லம் தேடி வரும் என்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் சித்தர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கௌரவக் குறைவு ஏற்படாமல் இருக்க சிறப்பாக செயல்படுவது நல்லது. பேசும்பொழுது நிதானத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். துன்பம் வந்தபோதிலும் சிரிக்கக் கற்றுக் கொண்டவர்கள் நீங்கள், ஆகையால் எந்த விஷயத்தையுமே யோசித்து செய்யுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகக் கூடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படியே பயணம் செய்வதாக இருந்தாலும் பொருட்களின் மீதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சொந்த பந்தங்களின் வீட்டு விஷேசங்களை முன் நின்று நீங்கள் நடத்துவீர்கள். அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். மாலை நேரங்களில் கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இருக்கும்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கவனமாக பாடங்களை படிப்பது மிகவும் நல்லது. அது மட்டுமில்லாமல் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அது போலவே நீங்கள் வெளியில் செல்லும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய செல்வாக்கும் செல்வமும் இன்று உயரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் வழக்குகளை ஒத்திப் போடுதல் நல்லது. அதேபோல அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வையுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். இன்று மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். வீண் குழப்பம் காரியதடை கொஞ்சம் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். நீண்ட பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
கவன தடுமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். அது போலவே பணவரவு தாமதப்பட்டு தான் இன்று வந்து சேரும். சொத்துக்கள் சம்பந்தமாக பிரச்னைகள் எதுவும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். பழைய சொத்துக்கள் உங்கள் கையில் சேருவதற்கான வாய்ப்புகள் இன்று இருக்கும். புதிய முயற்சிகள் இன்று ஏதும் வேண்டாம். பொறுமை மட்டும் கையாளுங்கள். அதுபோலவே இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு கடுமையாக உழைப்பீர்கள். அதுபோலவேதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு ரொம்ப கடுமையாக உழைப்பீர்கள்.
உங்களுடைய வசீகரப் பேச்சு அனைவரையும் கவரக்கூடிய விதத்தில் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஓரளவு சிறப்பைக் காணலாம். இன்று மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் கடினமாக உழைத்துத்தான் பாடங்களை படிக்க வேண்டும். பாடத்தில் மட்டும் இன்று கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஊதா நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். உடன் பிறப்புகளால் அதிக உதவி உண்டாகும். கோவில் குல பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களும் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் மட்டும் கவனமாக இருங்கள்.
அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும். தெய்வீக சிந்தனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். இன்று அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு மனதிற்கு ஏற்றார் போலவே நடக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் , கலகலப்பும் எந்தவித குறையும் இருக்காது. இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கவனமாக படியுங்கள். அதுபோலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள்வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக தனவரவு அதிகரிக்கும். உடலை பேணிக் காப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்காது. பங்களா போன்று அழகிய தனி வீடு உங்களுக்கு அமையும். அதாவது வீடு வாங்க கூடிய யோகம் இன்று உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். இன்று மனத்தெளிவு ஏற்படும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். உடல் நிலையில் சின்னதாக ஒரு மாற்றம், என்னவென்றால் வயிறு கோளாறு சம்பந்தமான சிறு பிரச்சனை வரக்கூடும். அதற்காக நீங்கள் சரியான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டால் போதுமானது.
பணவரவு உங்களுக்கு கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வீகபக்தி போன்றவை அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தை வெற்றியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். மூத்த சகோதர்களிடம் விட்டுக்கொடுங்கள் , அது நன்மையை கொடுக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதே போல ஆதாயம் தரும் பதவிகளை நீங்கள் வகிக்கக்கூடும். அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்க கூடும். அதேபோல விளையாட்டுத் துறையில் உங்களுக்கு ஆர்வம் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இன்று இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். செல்வ பாக்கியங்களும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துவீர்கள். அன்னையின் ஆதரவால் துணிவுடன் செயல்களில் இறங்கி வெற்றி காண்பீர்கள். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் பெறுவீ ர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற விடாமல் படிக்க வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
விளையாட்டில் ஆர்வம் செல்லும். சக மாணவருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியர்களை நீங்கள் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. கூடுமானவரை அனுசரித்து செல்லுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய புதிய முயற்சியில் வெற்றியும் கிடைக்கும்.
இன்று ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளக்கூடிய நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! உங்கள் திறமை பிறரால் பாராட்ட படக்கூடும். புதிய நண்பர்களின் வழிகாட்டுதல் தனவரவை அதிகமாக்கி கொடுக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். இன்று மாணவர்களுக்கு அறிவுத்திறன் கூடி கல்வி சிறக்கும். இன்று மனம் அமைதி உண்டாகும். எதிலும் நல்ல பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும் உறுதியான முடிவு எடுப்பதிலும் வல்லவர்களாக திகழ்வீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி ஏற்படும்.
எதிர்பாராத திடீர் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். ஆகையால் கூர்ந்து கவனித்து பதில் கொடுங்கள். புதிய மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். சரியான வாய்ப்புகள் ஏதேனும் கிடைத்தால் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான வேலைக்கு செல்லும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எடுத்த காரியங்களில் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். செய்வதை சீராக செய்தால் வெற்றி உறுதி என்பது உங்களுக்கு தெரியும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். அதே போல் கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்.
கடன் விவகாரங்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் , சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனம் இருக்கட்டும். நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். ஆகையால் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது சிறப்பை கொடுக்கும். கூடுமான வரை பொறுமையை மட்டும் இன்று கையாளுங்கள். மாணவர்கள் கல்வியில் நிதானமாக செயல்படுங்கள். சக மாணவர்களிடம் ஒற்றுமையைப் பேணவேண்டும். கூடுமானவரை ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு இன்று சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் செல்லும் உல்லாசமான சுற்றுலா பயணங்களால் ஆனந்தம் பெருகும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகப் பிரச்சினைகள் அனைத்தும் குறையும். தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியான சூழ்நிலையை கொடுக்கும். கவலைப்படாதீர்கள். எல்லாம் மாலை நேரத்திற்குள் சரியாகிவிடும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அது மட்டும் உங்களுக்கு சிரமத்தை கொடுக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை இன்று உண்டாகும். அரசாங்கப் பணிகள் அனைத்துமே தொய்வு இல்லாமல் நடைபெறும். ஓரளவு இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காரியங்களைச் செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் திட்டமிட்டு செய்யுங்கள். முன் கோபத்தை தவிர்த்து விடுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது அன்பாக பேசுங்கள். இன்று நீங்கள் கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் அனைத்தும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. கல்வியின் சிறப்பை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சக மாணவரிடம் கொஞ்சம் பழகும் பொழுது கவனமாக பழகுங்கள். அவர்களிடம் கொஞ்சம் நீங்கள் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். செல்வ போக வாழ்க்கை உங்களுக்கு அமையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று காதல் விஷயங்களில் கன்னியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதாவது காதல் கைகூடும் நாளாக இருக்கும். அதுபோல வெளியிடங்களுக்கு சென்று இனிதாக பேசி பொழுதை கழிப்பீர்கள். இன்று படிப்பு விஷயங்களில் கொஞ்சம் கோட்டை விட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். படிப்பை கவனமாக நீங்கள் படிப்பது நல்லது. இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசித்து பார்த்து செய்யுங்கள்.
பண விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மூத்த கலைஞர்களின் வழிகாட்டுதலால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வரும் சவால்களை சந்தித்த பின்னரே வெற்றி கிடைக்கும். பங்குசந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வெளிநாட்டு தொடர்பான வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை மேலோங்கும். இனிமையாகப் பேசி காரியங்களை நீங்கள் சாதித்துக் கொள்வீர்கள். உங்களுடைய திறமையும் இன்று வெளிப்படும் நாளாக இருக்கும்.
அக்கம்பக்கத்தினரிடம் மட்டும் அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதிஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்