மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்துவந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது