வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக தென் மற்றும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்னையில் அதிக வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும் , குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் , ஆழியார் அணை பகுதி மற்றும் சிவகிரியில் தலா 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.