தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றை வாங்கி வருகின்றனர். இதனிடையே குடிசைப்பகுதி மற்றும் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மாவட்டம் வாரியாக விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் யானைகள் உள்பட விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் தீ விபத்தை தடுப்பதற்காகவும் பட்டாசு பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.