‘விருமன் ‘ படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க ,எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.