கோவா மாநிலம், பிகோலிம் நகராட்சியில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தசரத் வைகங்கர். தனது பணியை முடித்துவிட்டு எப்போதும் போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியை வைத்து விட்டு குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நான்கு வயது மகன் துப்பாக்கியை விளையாட்டாய் எடுத்து தவறுதலாக டிரிகரில் கை வைத்துள்ளான். அப்போது குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்தது.
துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தான். பின்னர் அவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.