தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் ஜமீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயேந்திரம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் வட்டிக்கு 80,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் அந்தக் கடனுக்கு இரண்டு ஆண்டுகளாக கடன் தொகைக்கு மூன்று மடங்காக வட்டி மட்டுமே செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாததினால் கடன் வாங்கியவரை நேரில் சந்தித்து தற்போது பணம் கட்ட முடியாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து கடன் கொடுத்தவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தினால் மன உளைச்சலில் இருந்த ஜமீர் காவல்நிலையத்தில் எதிராக பெற்றோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மீது தண்ணீர் ஊற்றி குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.