Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “பேசும்போது நிதானமாகப் பேசுங்கள்”… உங்களுடைய தனித்திறமை மேம்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் முன் கோபத்தால் உறவுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படக் கூடும். அதனால் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மையும் உண்டாகும். இன்று மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாராட்டுகளை பெறுவார்கள்.

உங்களுடைய தனித்திறமை மேம்படும். சக மாணவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கிற்கு இடம் கொடுக்க வேண்டாம். இன்று பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அதுபோலவே குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவே இன்று காணப்படுவார்கள். முக்கியமான பணியையும் இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதுமட்டுமில்லாமல் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பாசம் அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதுபோலவே வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சிறிதாக வீண் அலைச்சல் இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது வெள்ளை நிற ஆடை  அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு செல்வச் செழிப்பான நாளாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |