Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 23,000…. மெகா தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

23 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று இருக்கிறது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கப்பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளகுட்டை உள்பட ஆறு பகுதிகளிலும் ஏழாவது மெகா தடுப்பூசிப் போடும் முகாம் நடைபெற்று இருக்கிறது.

இதை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டி.ஆர் செந்தில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் ஒரே நாளில் 23 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |