டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்கள் எடுத்துள்ளது .
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது . தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர் .
இதில் இஷான் கிஷன் 4 ரன்னில் வெளியேற , அடுத்ததாக கே.எல்.ராகுலுடன் 18 ரன்னில் ஆட்டமிழந்தார் .அவரை தொடர்ந்து ரோஹித் சர்மா 14 ரன்னில் அவுட் ஆக , விராட் கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதனால் இந்திய அணி 48 ரன்களுக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது.இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் (12), ஹர்திக் பாண்ட்யா (23), ஷர்துல் தாகூர் (0) என சொற்ப ரன்னில் வெளியேறினர் .இறுதியில் அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்ததுள்ளது . நியூசிலாந்து அணி சார்பில் தரப்பில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும் ,சோதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர் .தற்போது களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது .