மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் ரயில்களின் கால அட்டவணை மாற இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள ரயில்களின் கால அட்டவணையை அக்டோபர்-1 முதல் மாற்ற இந்திய ரயில்வே துறை திட்டமிட்டது. ஆனால் இந்தத் திட்டம் அக்டோபர்-31க்கு ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக நவம்பர் 1 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி 13 ஆயிரம் பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களின் நேரம் மாறுகிறது.