தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகிறது.சுமார் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ளனர்.
காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழுநேரமும் வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த ஓரிரு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, குமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.