Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இந்தியாவை பந்தாடியது நியூசிலாந்து ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் நேற்று இரவு ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது . ஆனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி தடுமாறியது. இதனால் 48 ரன்களுக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இறுதியில்  அதிரடி காட்டிய  ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் குவிக்க,  20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில்  தரப்பில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டும் ,சோதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர் .

இதன்பிறகு 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் குப்தில் 20 ரன்னில் வெளியேறினார் .இதன்பிறகு டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர் .இதில் அதிரடியாக விளையாடிய மிட்செல் 49 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக 14.3 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Categories

Tech |