Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இதை மட்டும் யாரும் செய்யாதீங்க…. 3 ஆண்டு சிறை நிச்சயம்….!!!!

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பயணிகள் யாரும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது.அதனை மீறி பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரயில்வே சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மின்சார ரயில்களில் கூட்ட நெருக்கடியால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக எடுத்துச் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும், விழுப்புரம்,அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் புறநகர் ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.ரயில் நிலையங்களின் நுழைவாயில்களில் ரயில்வே பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |