Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”பழைய சொத்து உங்கள் கையுக்கு வரும்” பேட்சால் அனைவரையும் கவருவீர்கள் …!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் வழக்குகளை ஒத்திப் போடுதல் நல்லது. அதேபோல அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வையுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். இன்று மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். வீண் குழப்பம் காரியதடை கொஞ்சம் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். நீண்ட பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

கவன தடுமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். அது போலவே பணவரவு தாமதப்பட்டு தான் இன்று வந்து சேரும். சொத்துக்கள் சம்பந்தமாக பிரச்னைகள் எதுவும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். பழைய சொத்துக்கள் உங்கள் கையில் சேருவதற்கான வாய்ப்புகள் இன்று இருக்கும். புதிய முயற்சிகள் இன்று ஏதும் வேண்டாம். பொறுமை மட்டும் கையாளுங்கள். அதுபோலவே இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு கடுமையாக உழைப்பீர்கள். அதுபோலவேதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு ரொம்ப கடுமையாக உழைப்பீர்கள்.

உங்களுடைய வசீகரப் பேச்சு அனைவரையும் கவரக்கூடிய விதத்தில் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஓரளவு சிறப்பைக் காணலாம். இன்று மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் கடினமாக உழைத்துத்தான் பாடங்களை படிக்க வேண்டும். பாடத்தில் மட்டும் இன்று கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஊதா நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |