Categories
தேசிய செய்திகள்

1 ரூபாய் அனுப்பினால் 51 ரூபாய் கிடைக்கும்…. கேஷ்பேக் ஆஃபர்…. உடனே பண்ணுங்க….!!!

நாட்டில் பேமெண்ட் செயலிகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகளை பரிவர்த்தனை களுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளுக்கு சென்று பணப் பரிவர்த்தனைகள் செய்த காலம் மாறிப்போய், தற்போது பேமெண்ட் செயலிகள் மூலம் ஸ்மார்ட்போன்களை கையில் வைத்துக்கொண்டு நொடியில் வங்கிப் பரிவர்த்தனைகளை முடிக்க முடிகிறது.

இத்தகைய மிகப் பெரிய மார்க்கெட் பேமெண்ட் செயலிகளுக்கு இந்தியாவில் இருப்பதை அறிந்து கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமும், இந்தியாவில் வாட்ஸ் அப் பேமெண்ட் செயலியை தொடங்கியது. ஆனால் மற்ற செயலிகளை போல பெரிய ஆதரவை இதற்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் மற்ற செய்திகளில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஷில் இருந்தே பிறருக்கு பணம் அனுப்பினால் 51 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும்.

இதில் ஒரு நிபந்தனை என்னவென்றால் 5 பேருக்கு பணம் அனுப்பினால் மட்டுமே உங்களுக்குக் கேஷ்பேக் கிடைக்கும். எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பி இந்த கேஸ்பேக்கை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.உதாரணமாக 5 பேருக்கு ஒரு ரூபாய் வீதம் அனுப்பி கூட இந்த கேஷ்பேக் பெறலாம்.இந்த கேஷ்பேக் ஆஃபர் “Give cash, get Rs 51 back” என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |