கடுங்குளிரினால் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடியினால் மக்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால் உணவில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கடுங்குளிரில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிலும் கடும் குளிரினால் இடம் பெயந்தவர்களுக்கு சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் 50,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.