தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் பண்டிகைக்கு முன்னதாக மக்களுக்கு கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அழைத்து குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருள்கள் அதிகபட்சமாக முன்கூட்டியே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தினமும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமப்படக் கூடாது என்று முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் முறையாக திறந்து செயல்படுவதையும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்கள் நவம்பர் 7ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.