Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார்கள் திறப்பு…. பராமரிப்பு பணியில் சிக்கல்…. “10 நாள் கழியட்டுமே” சங்கத்தலைவர் கருத்து….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் மட்டும்  திறக்கப்பட்டு பார்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்படும்  என்று டாஸ்மாக் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. மேலும் இதற்கான நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை பார்கள்  திறக்கப்படுவதால் பராமரிப்பு மற்றும் தூய்மை பணியில் தீவிரமாக நடைபெற்றது.

அந்த வழிகாட்டு  நெறிமுறைகளின்படி தெர்மல் ஸ்கேனர் மற்றும் கிருமி நாசினி போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பார்களில் பராமரிப்பு பணிகள் இன்னும் முடியாத நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் கூறியது, “பார்கள் மீண்டும் திறப்பதற்காக தொடர்ந்து போராடி வந்த நிலையில் பார்கள் திறக்கப்படுவது மகிழ்ச்சிதான். ஆனால் திடீரென்று பார்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

ஊழியர்கள பண்டிகை விடுமுறைக்கு சென்றிருப்பதால் முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பார் திறப்பை குறைந்தபட்சம் 10 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்பதை பற்றி மேலாண்மை இயக்குநரிடம்  இன்று நேரில் சென்று சந்தித்து பேச உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். மேலும் மது பிரியர்கள் எது எப்படி இருந்தாலும் இத்தனை மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை பார்கள் திறக்கப்படுவது உண்மையான தீபாவளி என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |