Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”மாணவர்களின் கல்வி சிறக்கும்” வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படும் …!!

தனுசு ராசி அன்பர்களே..!! உங்கள் திறமை பிறரால் பாராட்ட படக்கூடும். புதிய நண்பர்களின் வழிகாட்டுதல் தனவரவை அதிகமாக்கி  கொடுக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். இன்று மாணவர்களுக்கு அறிவுத்திறன் கூடி கல்வி சிறக்கும். இன்று மனம் அமைதி உண்டாகும். எதிலும் நல்ல பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும் உறுதியான முடிவு எடுப்பதிலும் வல்லவர்களாக திகழ்வீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி ஏற்படும்.

எதிர்பாராத திடீர் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். ஆகையால் கூர்ந்து கவனித்து பதில் கொடுங்கள். புதிய மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். சரியான வாய்ப்புகள் ஏதேனும் கிடைத்தால் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான வேலைக்கு செல்லும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |