இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இசை ஆல்பத்தின் 40 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
இங்கிலாந்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ரோலிங் ஸ்டோன் குழுவினரால் டாட்டூ யூ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் பாஸ்டனில் பிரபல ரோபோ நிறுவனம் ஒன்று ரோபோக்களை வைத்து அந்த ஆல்பத்தின் இசைக்கு நடனமாட வைத்துள்ளனர்.
மேலும் 40 ஆண்டுகளுக்கு முன் நடனமாடியவர்களின் உடல்மொழி எவ்வாறு இருந்ததோ அதே போன்று அந்த ரோபோவும் அச்சுபிசகாமல் ஆடி அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.