Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”காதம் கைகூடும்” பங்குசந்தையில் நல்ல லாபம் இருக்கும் …!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று காதல் விஷயங்களில் கன்னியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதாவது காதல் கைகூடும் நாளாக இருக்கும். அதுபோல வெளியிடங்களுக்கு சென்று இனிதாக பேசி பொழுதை கழிப்பீர்கள். இன்று படிப்பு விஷயங்களில் கொஞ்சம் கோட்டை விட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். படிப்பை கவனமாக நீங்கள் படிப்பது நல்லது. இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை  யோசித்து பார்த்து செய்யுங்கள்.

பண விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மூத்த கலைஞர்களின் வழிகாட்டுதலால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வரும் சவால்களை சந்தித்த பின்னரே வெற்றி கிடைக்கும். பங்குசந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வெளிநாட்டு தொடர்பான வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை மேலோங்கும். இனிமையாகப் பேசி காரியங்களை நீங்கள் சாதித்துக் கொள்வீர்கள். உங்களுடைய திறமையும் இன்று வெளிப்படும் நாளாக இருக்கும்.

அக்கம்பக்கத்தினரிடம் மட்டும் அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதிஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |