நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.266 உயர்ந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இதற்கு முன்னதாகரூ. 1,734 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ரூ. 266 அதிகரித்து 2000.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.