Categories
தேசிய செய்திகள்

வகுப்புக்குள் தள்ளாடிய ஆசிரியர்…. மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்திற்குட்பட்ட மதியாடோ என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரான ராஜேஷ் முண்டா சம்பவத்தன்று மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அப்போது அவர், சில மாணவிகளை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த மாணவிகளை தன்னோடு நடனமாட கட்டாயப்படுத்தியதுடன், அவரும் நடனமாடினார். பின்னர் அதை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் செய்தனர். இதுகுறித்த விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் ராஜேஷ் முண்டாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தலைமை ஆசிரியரே போதையில் மாணவிகளை நடனமாட கட்டாயப்படுத்திய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |