அமெரிக்காவின் துணை அதிபர் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.
அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை ஊக்கத்தவணையாக செலுத்திக் கொண்டார். அவர் ஏற்கனவே இரு தவனை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்பு கூறியதாவது “அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தவர்கள் தான்.
ஆகவே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் தான் நாம் நோய்தொற்று பாதிப்பை கடந்து செல்ல முடியும்” என்று கூறியுள்ளார். குறிப்பாக இரு தவணை தடுப்பூசி செலுத்தக் கொண்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.