Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2 முக்கிய மேம்பாலம்…. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலை ஆகியவற்றை இணைக்கும் மேல்தட்டு மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த தரமணி 100அடி சாலை வரை 1200 மீட்டர் நீளம் 13.5 மீட்டர் உயரத்தில் மேம் பாலம் கட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் எதிரில் 100 அடி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 99 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் திறக்க படுவதன் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த மேம்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக மேம்பாலம் கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதனால் தற்போது பணிகள் விரைவு படுத்தப்பட்டு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் இந்த மேம்பாலம் கோயம்பேடு ஜெய் நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் வரை செல்கிறது.

Categories

Tech |