தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்த தீபாவளிக்கு மறு நாளான நவம்பர் 5 ஆம் தேதி வெள்ளியன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Categories