மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்பாலப்பட்டியில் முதியவர் முத்துசாமி வசித்து வந்தார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த இந்தியன் (எ) மாக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிள் திடீரென முதியவர் மீது மோதியது.
இதனால் படுகாயமடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதியவர் முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.