தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதனால் பதறிப்போன போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தது கடலூரை சேர்ந்த ஒரு சமையல் மாஸ்டர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உதயநிதியின் ரசிகனாக இருந்ததாகவும், தனக்கு படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
Categories