வங்காளதேசத்தில் ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகள் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
தென் ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் சீதோஷணம் சீரான நிலையில் இல்லை. இதனால், பருவநிலை தவறுதலில் இருந்து தப்பிக்க அந்நாட்டு விவசாயிகள் புதிய முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். அதன்படி, விவசாயிகள் ஆற்றில் மிதக்க கூடிய மணல் படுக்கைகளை தயார் செய்து அதன் மூலம் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பருவநிலை தவறுதலால் பெரும் அழிவுகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சீதோஷண நிலை மாற்றத்தால் பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்டங்களை விவசாயிகள் தவிர்க்க விரும்பினர். எனவே விவசாயிகள் தற்போது உப்பு நீரை எதிர்த்து வளரும் ஆற்றல் கொண்ட மிதக்கும் மணல் படுக்கைகளை தயார் செய்து நெல் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.