ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் தலிபான்கள் தலைமையிலான புதிய அரசையும் ஆப்கானிஸ்தானில் உருவாக்கியுள்ளார்கள்.
ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு அமைத்துள்ள ஆட்சியை உலக நாடுகள் எதுவும் தற்போது வரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவிற்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதாவது ஆப்கானிஸ்தானில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அரசை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் உலகில் அமைதியான சூழல் நிலவாது என்று தலிபான்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் அமையப்பெற்ற அரசை உலக நாடுகள் ஏற்பதென்பது அந்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் உரிமையாகும் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.