Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாக்கிங் சென்ற கல்லூரி மாணவி” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அரியானூர் அக்ரகார தெருவில் செல்வகுமார் மகள் ஜோதிகா வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் ஜோதிகா அதிகாலையில் வாக்கிங் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார். இதனையடுத்து ஜோதிகா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனிடையில் ஜோதிகா ஆட்டையாம்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |