நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.தற்போது அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் முக ஸ்டாலின் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையானது குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூபாய் 5000 இலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதற்கட்டமாக திருவள்ளூர் – ராமநாதபுரம் வரை 11 மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.