குஜராத் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையலால் பரையா(50) என்பவர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இது அவருடைய சொந்த ஊரில் 75 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே தூரம் அதிகமாக இருப்பதனால் வாடகைக்கு வீடு ஒன்றை தேட ஆரம்பித்தார். ஆனால் கன்ஹையலால் பரையா பட்டியலினத்தவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு யாரும் வீடு தர முன்வரவில்லை.
இதன் காரணமாக அந்த ஆசிரியர் தினமும் 150 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய நிலைமை குறித்து முதலமைச்சரிடம் கூறினேன். வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யுமாறு கோரியிருந்தேன். ஆனால் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பட்டியலின சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கூறுகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது இங்கு சகஜம் தான் என்றும் ஆசிரியர்களும் பாதிக்கபடுவது துரதிஸ்டவசமானது என்று கூறியுள்ளார்.