கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் உள்ள பாரதியார் வீதியில் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடிச் சென்றதாக கோவில் நிர்வாகிகள் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோவில் உண்டியல் பணத்தை திருடிச் சென்றது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.