உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மனிதர்களைப் போல குரங்கு ஒன்று சிந்திக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குழந்தை போன்ற பழக்கவழக்கத்த்துடன் காணப்படும் இந்தக் குரங்கின் புத்திசாலித்தனத்தை கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்த்துள்ளனர்.
அந்த வீடியோவில் குரங்கு ஒன்று மனிதனின் கண்ணாடியை திருடி விடுகிறது. இதனையடுத்து அதை திருப்பி கேட்கும்பொழுது தனக்கு ஏதும் கிடைக்காமல் அந்த கண்ணாடியை தரமாட்டேன் என்பதுபோல் அடம்பிடிக்கிறது. பின்னர் அந்த குரங்குக்கு ஜூஸ் பாட்டிலை கொடுத்து பிறகு கண்ணாடியை திருப்பிக் கொடுக்கிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான ராபின் ஷர்மா என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர், “அந்த கையால் கொடுத்து இந்த கையால் எடுத்துக் கொள்” என்று பதிவிட்டுள்ளார்.
Smart 🐒🐒🐒
Ek haath do,
Ek haath lo 😂😂😂😂🤣 pic.twitter.com/JHNnYUkDEw— Rupin Sharma IPS (@rupin1992) October 28, 2021