Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கடையின் பூட்டு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டூர்ச்சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி இராமச்சந்திரன் கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் காலையில் ராமச்சந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் ராமச்சந்திரன் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 ஆயிரம், ரூ.2000 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் உண்டியல் பணம் ரூ.3000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமச்சந்திரன் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று கொக்கிரகுளத்தில் உள்ள இசக்கியம்மன் கோவிலில் மர்ம நபர் ஒருவர் புகுந்து கோவில் உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் மேலபாலயத்திலுள்ள ஒரு பள்ளிவாசலிலும் மர்மநபர்  உண்டியல் பணம் திருடியதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |