Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள்… உற்பத்தி செய்வதற்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யகூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளி மற்றும் பண்டிகை தினங்கள் வருவதால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை விற்பனை தயாரிக்கவோ, கடைகளில் விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ  உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் பொதுமக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்க கூடியதாகும்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மாவட்டத்தில் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை சட்ட விரோதமாக உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து தடையை மீறி பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை விற்பனை செய்வது தெரியவந்தால் உரிமையாளர்களுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் மாவட்ட நிவாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |