Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்…. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்….!!

தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லையில் கடந்த சில நாட்களாக பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். மேலும் சமாதானபுரம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் பொதுமக்கள் பட்டாசு கடைகள், இனிப்பு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் ஏராளமான மக்கள் தீபாவளியை முன்னிட்டு வீட்டிற்கு தேவையான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் கடைகளுக்கு வந்திருந்தனர். இந்த தங்க நகை கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பாளையங்கோட்டை, டவுன் போன்ற இடங்களில் இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் செய்யும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் தீபாவளி விற்பனையை பயன்படுத்தி நகை பறிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் கேமராக்களை பொருத்தி அதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சியில் 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |