அட்டகத்தி தினேஷ், ஆனந்தி நடிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’. இப்படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித், தனது நீலம் புரெடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பினை பா. ரஞ்சித் அதில் பதிவிட்டிருந்தார்.டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Gundu 💣 Worldwide from Dec 6th
TN Theatrical Rights Bagged by
" SRI URUMANATHAR PICTURES " @SriUrumanathar@AthiraiAthiyan @Dineshvcravi @anandhiactress @kishorkumardop @tenmamakesmusic @asokadds @DuraiKv @thinkmusicindia @officialneelam @pro_guna pic.twitter.com/8SEErQDqp1— pa.ranjith (@beemji) November 12, 2019