Categories
தேசிய செய்திகள்

அரசுப்பள்ளியில் படிக்கும் +2 மாணவர்களுக்கு…. முதல்வர் ஹேப்பி நியூஸ்…!!!

பள்ளிகள் திறக்கும் போது மதிய உணவு, அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த நாளான இன்று கடற்கரை காந்தி திடலில் புதுவை விடுதலை நாள் விழா நடந்தது. இதில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதனை அடுத்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி கொரோனா  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புதுவையில் பள்ளிகள் திறந்ததும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |