Categories
சினிமா தமிழ் சினிமா

பாபி-ரேஷ்மி வாழ்வில் இணைந்த மூன்றாவது நபர்….!!

கடந்த மாதம் வளைக்காப்பு முடிந்த நிலையில் பாபி-ரேஷ்மி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.பிறகு அடுத்த ஆண்டு மூத்ரா சிம்ஹா என்ற பெண் குழந்தை பாபி-ரேஷ்மி தம்பதியினருக்குப் பிறந்தது. இதைத்தொடர்ந்து நடிகை ரேஷ்மி நடிப்பிற்கு கேப் விட்டார். அதே வேளையில் நடிகர் பாபி சிம்ஹா பல படங்களில் கமிட் ஆனார். ரஜினியுடன் பேட்ட படத்திலும் காணப்பட்டார்.

Seithi Solai

இந்நிலையில் நடிகை ரேஷ்மி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் அவருக்கு வளைக்காப்பும் தடபுடலாக நடந்தது. தொடர்ந்து அவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |