Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. 2 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையைப் பூட்டி விட்டு அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |