தமிழகத்தில் மீன்பிடிக்க தடைக்கால நிவாரண தொகையை ரூ.6000 மாக உயர்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீன்பிடி குறைவு கால நிவாரண தொகையை ரூ.5000 லிருந்து ரூ.6000 மாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை ரூ.6000 மாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள1,80,000 மீனவ குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.108 கோடி நிவாரண தொகை வழங்கப்படும். இதன் முதல் கட்டமாக திருவள்ளுவர் முதல் ராமநாதபுரம் வரை 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு காலம் நிவாரணத் தொகை மொத்தம் ரூ.74.4 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் கடல் மீனவர்கள் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் மீனவர்கள் செலுத்திய சாந்தா பங்குத்தொகை ரூ.1500 மற்றும் அரசு நிவாரணத் தொகை 3000 என்று மொத்தம் 4,500 நிவாரண தொகை மீனவர்களுக்கு வழங்கப்படும். மேலும் மீன்பிடி குறைவு கால நிவாரண மற்றும் சேமிப்பு நிவாரண தொகை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மீன்பிடியை குறைவு காலமாக அனுசரிக்கப்படும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் வழங்கப்படும்.