தடை செய்யப்பட்டிருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அலுவலர் எச்சரிக்கை செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையொட்டி அதிகமான பட்டாசு கடைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடைகள் வைப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் இம்மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தடையின்மை சான்று வழங்கிய பட்டாசு கடைகளில் மறு ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து அங்கே தடை செய்யப்பட்டிருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்யப்படுகிறதா எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கிறதா எனவும் அவர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் தடை செய்யப்பட்டிருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் செய்முறை விளக்கம் அளித்துள்ளனர்.