Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

646 பண்ணை குட்டைகள்…. அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்…. கலெக்டரின் தகவல்….!!

தூய்மை கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக தூய்மை கணக்கெடுப்பு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது இம்மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக பல வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழாக 646 விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழாக நிலுவையில் இருக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் கட்டும் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் பழுதான சாலைகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இம்மாவட்டத்தில் இருக்கும் 208 ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக தூய்மை கணக்கெடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |