Categories
மாநில செய்திகள்

“பண்டிகை காலம்” கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் வணிகர்கள்….!!

பண்டிகை காலம் நெருங்கும் வேலையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நேற்றும்  சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும், அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் 2133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் பழைய விலையான 915 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இல்லதரசிகள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். எனினும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் உணவு பண்டங்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |